
மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் தில்லியில் அறிவிக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்.
நாகலாந்து மாநில பேரவையின் பதவிக் காலம் வரும் மார்ச் 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல மேகாலயா மாநிலத்தின் பேரவை பதவிக் காலம் மார்ச் 15 ஆம் தேதியுடனும், திரிபுரா மாநில பேரவையின் பதவிக்காலம் மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதையடுத்து இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று புதன்கிழமை அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் குஜராத், ஹிமாச்சலில் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவிக்கிறது.
அதாவது, நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இன்று புதன்கிழமை(ஜன.18) மதியம் 2.30 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நாகலாந்தில் பாஜக-நாகா மக்கள் முன்னிணியின் கூட்டணி ஆட்சியும், மேகாலயாத்தில் பாஜக-தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியும் மற்றும் திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.