பாரத ராஷ்டிர சமிதியின் முதல் பொதுக்கூட்டம்: கேஜரிவால், பினராயி பங்கேற்பு!

பாரத ராஷ்டிர சமிதியாக கட்சியின் பெயரை மாற்றிய பிறகு இன்று நடைபெறும் முதல் பொதுக்கூட்டத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பாரத ராஷ்டிர சமிதியின் முதல் பொதுக்கூட்டம்: கேஜரிவால், பினராயி பங்கேற்பு!

பாரத ராஷ்டிர சமிதியாக கட்சியின் பெயரை மாற்றிய பிறகு இன்று நடைபெறும் முதல் பொதுக்கூட்டத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தை ஆளும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தேசிய அரசியலில் தடம் பதிக்கும் நோக்கில் தெலங்கானா ராஷ்டிர சமிதியாக இருந்த தனது கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். இந்த பெயர் மாற்றத்திற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கம்மம் நகரில் பாரத ராஷ்டிர சமிதியின் முதல் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த பொதுகூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், பாரத ராஷ்டிர சமிதியின் கொடியை சந்திரசேகர் ராவ் ஏற்றி வைக்கவுள்ளார்.

இந்தாண்டு இறுதியில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான இந்த பொதுக்கூட்டம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com