கடந்த நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ் பெற்ற நன்கொடை எவ்வளவு தெரியுமா?

2021-22 நிதியாண்டில் பாஜக ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுதில்லி: 2021-22 நிதியாண்டில் பாஜக ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணைய விதிகளின்படி, அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பெறப்பட்ட நன்கொடைகளின் ஆண்டு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 8 தேசியக் கட்சிகளும் கடந்த 2021-22 நிதியாண்டில் பெறப்பட்ட நன்கொடைகளின் ஆண்டுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. அதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜக அதிகபட்சமாக ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ.1,033.7 கோடி பெற்றுள்ளது. மேலும், கட்சியின் செலவினமாக ரூ.854.46 கோடியாக உள்ளது.  

அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி நன்கொடை பெற்றுள்ளது. கட்சியின் செலவினமாக ரூ.400.41 கோடியாக உள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.2.87 கோடி நன்கொடை பெற்றுள்ளது. கட்சியின் செலவினமாக ரூ.1.18 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com