

அரசியல் தலைவர்களிலேயே திருமணம் பற்றி அதிகம் பேசப்படுவது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடையதுதான். அதுவும் ஒற்றுமை நடைப்பயணத்தின் போது பல இடங்களில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதும், அதற்கு அவர் பல ருசிகர பதில்களை அளிப்பதும் வாடிக்கை.
இந்த நிலையில்தான், ராகுல் காந்தி தற்போதும் தனது திருமணம் குறித்த கேள்விக்கு மிக அழகாக ஒரு பதிலை அளித்திருக்கிறார்.
அதாவது, தனக்கு பொருத்தமான ஒரு மணப்பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று பேட்டி ஒன்றில் ராகுல் கூறியிருக்கிறார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? இப்போதைக்கு அது திட்டத்தில் இல்லையா என்று பேட்டி எடுப்பவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு ராகுல், எப்போது எனக்குப் பொருத்தமான மணப்பெண் கிடைக்கிறாரோ, அப்போது நான் திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளிக்கிறார்.
இதற்கு பேட்டி எடுப்பவர், மிகப்பெரிய பட்டியல் இருக்குமோ என்று கேட்கிறார். அதற்கு அவர், இல்லை, அவன் அன்பானவராக, அறிவானவராக இருக்க வேண்டு என்கிறார் ராகுல்.
உடனே ராகுலை கிண்டலடிக்கும் வகையில், பேட்டி எடுப்பவர், பெண்களே உங்களுக்கு இந்த செய்தி கிடைத்திருக்கும் என்று சொல்ல.. ராகுலோ, என்னை வம்பில் மாட்டிவிடப் பார்கிறீர்கள் என்கிறார் பதிலுக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.