ஜூன் மாதத்தில் டீசல் விற்பனை சரிவு!

ஜூன் மாதத்தில் டீசல் விற்பனை சரிவு!

நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில், வேளாண் துறையில் தேவை குறைந்தும், போக்குவரத்து குறைந்ததால் ஜூன் மாதத்தில் டீசல் விற்பனை குறைந்தது.

நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில், வேளாண் துறையில் டீசலுக்கான போக்குவரத்து குறைந்ததால் ஜூன் மாதத்தில் டீசல் விற்பனை குறைந்தது. டீசலுக்கான தேவை ஜூன் மாதத்தில் 3.7 சதவிகிதம் குறைந்து 7.1 மில்லியன் டன்னாக உள்ளது.

நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல், மொத்த தேவையில் ஐந்தில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முறையே 6.7 சதவீதம் மற்றும் 9.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், பெட்ரோல் விற்பனை 2023 ஜூன் மாதத்தில் 3.4 சதவிகிதம் அதிகரித்து 2.9 மில்லியன் டன்னாக இருந்தது. இருப்பினும், மாதந்தோறும் விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தொழில்துறை மற்றும் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்ததால் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பருவமழையின் வருகை வெப்பநிலையை தணித்து, விவசாய வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய டீசல் என்ஜின்களை இயக்குவதற்கான தேவை குறைந்தது.

டீசல் நுகர்வு ஜூன் 2021ஐ விட 30 சதவிகிதமும், ஜூன் 2019ஐ விட 6.5 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், விமான எரிபொருள் தேவை கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 6 சதவிகிதம் உயர்ந்து 587,300 டன்னாக இருந்தது. 2023 மே மாதத்தில் 6,02,000 டன்னாக இருந்த விற்பனை 2.4 சதவிகிதம் சரிந்துள்ளது.

ஜூன் மாதத்தில், சமையல் எரிவாயு எல்பிஜி விற்பனையும் 0.8 சதவிகிதம் குறைந்து 2.27 மில்லியன் டன்னாக இருந்தது. ஜூன் 2021 உடன் ஒப்பிடும்போது எல்பிஜி நுகர்வு கிட்டத்தட்ட சமமாக இருந்த போதிலும், இது கரோனாவுக்கு முந்தைய ஜூன் 2019 ஐ விட 28.5 சதவிகிதம் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com