ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

146 புதிய ஆம்புலன்ஸ் சேவை: ஆந்திர முதல்வர் தொடங்கிவைத்தார்!

ஆந்திர மாநிலத்தில் 146 புதிய ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கிவைத்தார். 
Published on

ஆந்திர மாநிலத்தில் 146 புதிய ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதல்வர் 
ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கிவைத்தார். 

ரூ.35 கோடி செலவில் இந்த புதிய ஆம்புலன்ஸ்கள் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு ஏழை நபருக்கும் சுகாதார சேவைகள் இலவசமாக கிடைக்கும் நோக்கத்தில் இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட ஆந்திரம் முழுவதும் மொத்தம் 768 வாகனங்கள் சேவையில் உள்ளன. 

ஆம்புலன்ஸ் இயக்கத்திற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ.189 கோடி செலவழித்து வருகிறது. கடந்த 2019ல் 531 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருந்த நிலையில் அவற்றில் 336 மட்டுமே செயல்படும் நிலையில் இருந்தன. 

108 ஆம்புலன்ஸ் சேவை முதன்முதலில் தெற்கு மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com