இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 8.40 சதவீதம் அதிகரிப்பு

நடப்பு 2023-24ஆம் நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் வரையிலான காலத்தில், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 8.40 சதவீதம் அதிகரித்து 22.293 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 8.40 சதவீதம் அதிகரிப்பு

புதுதில்லி:  நடப்பு 2023-24ஆம் நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் வரையிலான காலத்தில், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 8.40 சதவீதம் அதிகரித்து 22.293 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி முந்தைய காலாண்டில் 205.65 மெட்ரிக் டன்னாக இருந்தது என்று நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 29.10 மெட்ரிக் டன்னாக இருந்த உற்பத்தி, 2024ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.74 சதவீதம் அதிகரித்து 30.48 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 224.08 மெட்ரிக் டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.97 சதவீதம் அதிகரித்து 239.69 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

ஜூன் 30, 2023 நிலவரப்படி, மொத்த நிலக்கரி கையிருப்பு 37.62 சதவீதம் உயர்ந்து 107.15 மெட்ரிக் டன்னாக உள்ளது. அதிகரித்து வரும் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை இந்த வளர்ச்சி உதவுகிறது என்று நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் 9.85 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்நிலையில் 2024ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலக்கரி உற்பத்தி 175.35 மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com