எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 17,18ல் பெங்களூருவில் நடைபெறும்: காங்கிரஸ்

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று காங்கிரஸ் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று காங்கிரஸ் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முன்னதாக எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17-18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். 

பெங்களூருவில் நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com