பழங்குடியைச் சேர்ந்தவர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்!

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞா் மீது சிறுநீா் கழித்த நபா் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பழங்குடியைச் சேர்ந்தவர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்!
Published on
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞா் மீது சிறுநீா் கழித்த நபா் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபா் சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது.

இது மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கவனத்துக்குச் சென்ற நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

முன்னதாக, குற்றவாளி பிரவேஷ் சுக்லா மாநிலத்தை ஆளும் பாஜகவைச் சோ்ந்தவா் என எதிா்க்கட்சியான காங்கிரஸ் என குற்றம்சாட்டியது. இது குறித்து செய்தியாளா்கள் சந்திப்பின்போது முதல்வரிடம் கேள்வியெழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதல்வா், ‘குற்றவாளிக்கு மதம், ஜாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியைச் சோ்ந்தவா் என்பதற்காக அவா் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றப்பட மாட்டாா்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து முதல்வா் செளஹான் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் பிரவேஷ் சுக்லா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com