கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆக்ராவில் கார் மீது ஆட்டோ மோதல்: 6 பேர் பலி

ஆக்ராவில் வேகமாக வந்த கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Published on

ஆக்ராவில் வேகமாக வந்த கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோரகர் காவல் நிலையம் அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் கார் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை ஆணையர் சோனம் குமார் தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுநர் உள்பட 6 பேர் பலியாகினர். காரை ஓட்டிவந்த நபர் தலைமறைவானார். அவரது  நண்பர்களான பிங்கு மற்றும் பனியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோரகர் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார். 

கார் ஓட்டுநர் பண்டி நண்பர்களுடன் குடித்துவிட்டு, பின்னர் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நடந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com