அமர்நாத் யாத்திரை: 5 நாள்களில் 67 ஆயிரம் பேர் தரிசனம்!

அமர்நாத் யாத்திரையின் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் சுமார் 67 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் தெரிவித்துள்ளது. 
அமர்நாத் யாத்திரை: 5 நாள்களில் 67 ஆயிரம் பேர் தரிசனம்!

அமர்நாத் யாத்திரையின் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் சுமார் 67 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடர்ந்து மக்கள் தரிசனத்திற்கு கோயில் நடை திறந்துவைக்கப்படுகிறது. 

அமர்நாத் யாத்திரையின் 3வது நாளில் 17 ஆயிரம் பேரும், நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை 13 ஆயிரம் பேரும், ஐந்தாவது நாளான நேற்று 18 ஆயிரம் பேரும் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை அமர்நாத் குகைக் கோயில் தொடங்கியலிருந்து இதுவரை மொத்தம் 67,566 பேர் தரிசித்துள்ளனர். 

இந்நிலையில் அமர்நாத் யாத்திரையில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு-காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

62 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் பயணிகளின் வசதிக்காக பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

பயங்கரவாத அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் சர்வதேச எல்லையிலிருந்து கட்டுப்பாடு கோடு வரையிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com