மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: 3 மணி நேரத்தில் 6 பேர் பலி!

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நேரத்தில் 6 பேர் பதியாகியுள்ளனர். 
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: 3 மணி நேரத்தில் 6 பேர் பலி!

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நேரத்தில் 6 பேர் பதியாகியுள்ளனர். 

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 தொடங்கியது. பாதுகாப்புப் பணியில் சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரா்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே மோதலும் வன்முறையும் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தேர்தல் தொடங்கியது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற மூன்று மணி நேரத்திலேயே வன்முறை தொடர்பான பிரச்னைகளில் சுமார் ஆறு பேர் பலியாகியுள்ளனர். 

ஆறு இறப்புகளில், முர்ஷிதாபாத்தில் 2 பேரும், கூச்பெகாரில் 2 பேரும், கிழக்கு பர்த்வான், மால்டா மற்றும் நாடியா ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். 

மாநிலம் முழுவதும் வெடித்த மோதல்களில் பலர் காயமடைந்தனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை. 

மேற்கு வங்கத்தில் ஜூலை 8ல் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதிலிருந்து தேர்தல் தொடர்பான வன்முறைகளில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் வெவ்வேறு பகுதியில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com