
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், குறிப்பாக தில்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.
வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பருவ மழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் புதுதில்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ரயில் சேவைகள் தாமதமாகி வருவதாகவும், சில இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர்.
கனமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.