நடுவழியில் நின்ற ரயில்.. இறங்கித் தள்ளும் ராணுவ வீரர்கள்! (விடியோ)

பழுதாகி நின்ற காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், பழுதான ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா?
நடுவழியில் நின்ற ரயில்.. இறங்கித்  தள்ளும் ராணுவ வீரர்கள்! (விடியோ)

பழுதாகி நின்ற காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், பழுதான ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா?

வட மாநிலப் பகுதியில் பெயர் தெரியாத பழுதாகி நின்ற ரயிலை ராணுவ வீரர்களும், மக்களும், ரயில்வே ஊழியர்களும் தண்டவாளத்தில் இறங்கி தள்ளும் காணொலி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சாலையில் பழுதாகி நிற்கும் பேருந்தை, பயணிகள் கீழே இறங்கி தள்ளி ஸ்டார்ட் செய்வதை நேரில் பலர் கண்டதுண்டு. சிலர் அனுபவித்தும் இருப்பர். ஆனால், முதல் முறையாக பழுதாகி நின்ற ரயிலை தள்ளும் காட்சி வெளியாகியுள்ளது.

எனினும், இந்த ரயில் எந்தப் பகுதியில் நின்றுவிட்டது, இதனை ராணுவ வீரர்கள் தள்ளுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், தெற்கு மத்திய ரயில்வே பகுதியின் கீழ் இயங்கும் ஒரு ரயில் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

அதன்படி, ஒரு ரயில், நடுவழியில் பழுதாகி நின்றுள்ளது. இதையடுத்து, ரயிலில் பயணித்த ராணுவ வீரர்களும், பிற பயணிகளும் இறங்கி, அந்த ரயிலை தள்ளுவது போன்ற காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆனால், பழுதாகி நின்ற ரயிலின் பெயர் குறித்தும், எந்த வழிதடத்தில் பழுதானது என்பது குறித்த செய்திகள் வெளியாகவில்லை.

ரயிலை பொதுமக்கள் தள்ளி இயக்க முடியுமா? அவ்வாறு தள்ளுவதற்குக் காரணம் என்ன என்றெல்லாம் கருத்துகளும் விமரிசனங்களும் பதிவாகி வருகிறது.

வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்களை இயக்குவதாக பெருமை கொள்ளும் மத்திய அரசு, மறுபக்கம், பிற ரயில்களையும் வழித்தடங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டுமென்றும், ரயில் ஸ்டார்ட் ஆகும் பட்சத்தில் கீழே இருக்கும் பயணிகள் எவ்வாறு பாதுகாப்பாக ரயிலில் மீண்டும் ஏறுவார்கள் எனவும் இணையவாசிகள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com