தில்லியில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!

தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் தொடங்கியது.
தில்லியில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!
Published on
Updated on
1 min read

தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் தொடங்கியது. 

நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. இந்த 6 ஆண்டுகளில் இதுவரை ஜிஎஸ்டி கவுன்சிலின் 49 கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் தில்லியில் இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 12 மணியளவில் தொடங்கியது. 

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மாநில நிதியமைச்சா்கள், மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டுள்ள நிலையில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டுள்ளார். 

இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விநியோகிக்கப்படும் உணவுகளுக்கான சரக்கு-சேவை வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்களிப்பது உள்ளிட்டவை தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், ‘பயன்பாட்டு வாகனங்கள்’ (யுடிலிடி வெகிகிள்) என்பதற்கான விளக்கத்தை முறையாக வகுத்து, எஸ்யுவி வாகனங்களைப் போல எம்யுவி வாகனங்களுக்கும் 22 சதவீத செஸ் விதிப்பது குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அத்தகைய நிறுவனங்களால் வழங்கப்படும் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிப்பது தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆராயவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com