அமர்நாத்: 13 நாளில் 1.62 லட்சம் பேர் தரிசனம்!

அமர்நாத் யாத்திரையின் 13வது நாளில் 16,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலை தரிசனம் செய்துள்ளனர். 
அமர்நாத்: 13 நாளில் 1.62 லட்சம் பேர் தரிசனம்!
Updated on
1 min read

அமர்நாத் யாத்திரையின் 13வது நாளில் 16,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலை தரிசனம் செய்துள்ளனர். 

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய வருடாந்திர யாத்திரையில் இதுவரை சுமார் 1.62 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

7,245 பேர் அடங்கிய பயணிகளின் மற்றொரு குழு பகவதி நகர் யாத்திரி நிவாஸிலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். இதில் 3,144 பயணிகள் பால்டால் வழியாகவும், 4,101 பேர் பஹல்கம் பாதையிலும் சென்றனர். 

புனித யாத்திரை தொடங்கி இதுவரை, 19 பேர் இயற்கை காரணங்களுக்காக உயிரிழந்தனர். 

பஹல்கம், பால்டால் வழியாக குகைக் கோயிலை அடைய 3 முதல் 4 நாள்கள் ஆகும். இரண்டு வழிகளிலும் ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன. 

குகைக் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் 62 நாள் அமர்நாத் யாத்திரை பயணம் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமா திருவிழாவுடன் நிறைவடைகிறது. 

பயணிகளுக்கு வசதியாக அங்காங்கே மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆல்கஹால் மற்றும் புகையிலைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com