எதிர்க்கட்சிகளால் இதைச் செய்யவே முடியாது: வம்பிழுக்கும் ஏக்நாத் ஷிண்டே

ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளரைக் கூட அறிவிக்க முடியாது என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியிருக்கிறார்.
ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே


ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளரைக் கூட அறிவிக்க முடியாது என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியிருக்கிறார்.

வீட்டு வாயிலில் அரசு சேவை என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்  பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி உறுதியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் எங்கள் வசம் 20 எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளனர். இதில் யாருக்கும் பாகுபாடு கிடையாது. யாருக்கும் அநீதி இழைக்கப்படாது என்றும் ஷிண்டே கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் கூட, அவர்களால் அவர்களது தலைவரைக் கூட தேர்வு செய்துஅறிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதுவே, பிரதமர் மோடியின் வெற்றியை உறுதி செய்துவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அஜீத் பவாரை அமைச்சரவையில் சேர்த்திருப்பதால், முடிவுகள் வேகமாக எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com