சரத் பவாருடன் அஜித் பவார் அணி திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் அணியினர் சந்தித்துள்ளனர். 
சரத் பவாருடன் அஜித் பவார் அணி திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் அணியினர் சந்தித்துள்ளனர். 

சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே அழைப்பை ஏற்று மும்பை ஒய்வி சவான் மையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அஜித் பவாரின் அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், ஜிதேந்திரா உள்ளிட்டோர் சரத் பவாருடன் சந்தித்துள்ளனர். மூத்த தலைவர் பிரபுல் படேல் உள்ளிட்டோர் சரத் பவாரை சந்தித்துள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சந்திப்பிற்கு பிறகு பிரபுல் படேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சரத் பவாரின் ஆசிர்வாதத்தைப் பெற நாங்கள் அனைவரும் இன்று இங்கு வந்தோம். என்சிபி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பவாரிடம் கோரிக்கை வைத்தோம். இது குறித்து, சரத் பவார் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார். மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது.

இந்நிலையில் சிவசேனை கட்சி சார்பில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனையடுத்து மகாராஷ்டிரத்தின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் அண்மையில் பிளவு ஏற்பட்டது.

அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். அவருக்கு மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் அவருடன் 8 எம்எல்ஏக்களும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா். மேலும், சில எம்.எல்.ஏ.க்களும், எம்.எல்.சி.க்களும் தனக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அஜித் பவார் கூறினார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com