மானிய விலையில் தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு

மானிய விலையில் தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு

தக்காளியை மானிய விலையில் ரூ. 80-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிப்பவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுதில்லி: தக்காளியை மானிய விலையில் ரூ. 80-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிப்பவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி விலை ரூ.150 -ஐ கடந்து விற்பனையாகிறது. உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 250 வரை விற்பனையாகிறது. தலைநகர் தில்லியில் ரூ.200-ஐ கடந்து விற்பனையானது.

இதையடுத்து, அரசு தில்லி-என்.சி.ஆரில் மொபைல் வேன்கள் மூலம் வெள்ளிக்கிழமை மானிய விலையில் தக்காளி கிலோ ரூ.90க்கு விற்பனையை அரசு தொடங்கியது. சனிக்கிழமை, வேறு சில நகரங்களில் மானிய விலையில் தக்காளி விற்பனையை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனையானது. 

தில்லி-என்.சி.ஆர் மற்றும் நொய்டா, லக்னௌ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அராஹ் ஆகிய இடங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனையானது.

இந்நிலையில், தக்காளி விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நகரில் மானிய விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மானிய விலையில் தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிப்பவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மறுமதிப்பீடு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தக்காளி சில்லறை விலை பெரும்பாலான பகுதிகளில் கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.200 ஆகவும், சில பகுதிகளில் பாக்கெட்டுகளில் ரூ.250 ஆகவும் உள்ளது, இதை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மானிய விலையில் தக்காளியை எங்கே, எப்படி வாங்குவது?
வெள்ளிக்கிழமை முதல், கூட்டுறவு சங்கங்கள், என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் மையம் சார்பில் மொபைல் வேன்கள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுகின்றன. தில்லி, நொய்டா, லக்னௌ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர் மற்றும் அராஹ் ஆகிய இடங்களில் கூட்டுறவு நிறுவனங்கள், இந்திய தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் மானிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இன்று திங்கள்கிழமை முதல் மேலும் சில நகரங்களில் மானிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

அரசாங்க தரவுகளின்படி, சனிக்கிழமை தக்காளி விலை கிலோ ரூ.117 ஆகவும், அதிகபட்ச விலை கிலோ ரூ.250 ஆகவும், குறைந்தபட்ச விலை ரூ.125 ஆகவும் இருந்தது. தக்காளியின் மாடல் விலை கிலோ ரூ.100 ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com