
மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து 2,200 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புணே, மும்பையில் மிக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ராய்காட்டில் நேற்றிரவு பெய்த கனமழைக்கு 125 வீடுகள் சேதமடைந்தன. கலப்பூர் தாலுகாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் சிக்சி பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இடைவிடாது பெய்த கனமழையால் ராய்காட்டில் உள்ள 28 அணைகளில் 17 அணைகள் நிரம்பியுள்ளதாக மாவர் நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாவட்டத்தின் பல இடங்களில் 200 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளன.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பன்வெல் தாலுகாவில் 267.7 மிமீ மழையும், போலட்பூர் 266 மிமீ, மஹாத் 230.9 மிமீ, கர்ஜாத் 226.6 மிமீ, பென் 212.7 மிமீ, யுரான் 207.5 மிமீ, சுதாகத் 196.4 மிமீ, கலாபூர் 182.5. தலா 186 மிமீ மற்றும் அலியாப்க் 180.4, ரோஹா 156.9 மிமீ, மான்கோன் 148.1 மீ.மீ, ஸ்ரீவர்தன் 145.4 மி.மீ பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் மிக கனமழை, வெள்ளம் காரணமாக 746 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,227 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதில் 704 பேர் போலத்பூர் தாலுகாவிலும், யுரேன் தாலுகாவில் உள்ள சிர்னர் கிராமத்தைச் சேர்ந்த 450 பேர் மற்றும் மகாத் தாலுகாவைச் சேர்ந்த 430 பேர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் சராசரி மழை அளவு 3,148 மி.மீ ஆகும். ஆனால் இந்தாண்டு சராசரி அளவில் 1,524.5 மி.மீ மழை இதுவரை பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.