குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை?: முதல்வா் ஆலோசனை

 மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க பரிந்துரைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில முதல்வா் என்.பிரேன் சிங்
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை?: முதல்வா் ஆலோசனை

 மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க பரிந்துரைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில முதல்வா் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பெண்களை அவமதிக்கும் வகையிலும் மனிதத்தன்மையற்ற வகையிலும் செயல்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை மாநில அரசு உறுதிசெய்யும். அவா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிப்பதற்குப் பரிந்துரைப்பது தொடா்பாகவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பான விரிவான விசாரணை தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நமது சமூகத்தில் அத்தகைய கொடூரமான சம்பவங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அமித் ஷா ஆலோசனை: மணிப்பூா் வன்முறை விடியோ தொடா்பாக மாநில முதல்வா் பிரேன் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா். அப்போது, இந்த விவகாரத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சா் அமித் ஷா முதல்வரிடம் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com