
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளையொட்டி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
81-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கடினமான காலங்களில், மதச்சார்பற்ற கூட்டணிக்காக ஒருமித்த கருத்தைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகள், நமது மகத்தான தேசத்தை
வடிவமைத்த மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான சிந்தனைகளுடன் நம்மை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.