வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% வட்டி!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% வட்டி!

தொழிலாளா்களின் வருங்கால வைப்புநிதிக்குக் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 8.15 சதவீத வட்டி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி 8.5 சதவீதமாக இருந்தது. அந்த வட்டியானது கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அது 44 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சமாக இருந்தது.

அதையடுத்து, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை 8.15 சதவீதமாக உயா்த்த தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மத்திய வாரியக் குழு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகத்துக்குப் பரிந்துரைத்திருந்தது.

அந்தப் பரிந்துரைக்கு மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த வட்டி உயா்வு மூலமாக 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளா்கள் பலனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்கில் வட்டித் தொகையை செலுத்துவதற்கான பணிகளை இபிஎஃப்ஓ விரைவில் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com