தக்காளி குறித்து சூப்பர் ஐடியா கொடுத்த உ.பி. அமைச்சர்!

தக்காளி குறித்து உத்தரப் பிரதேச அமைச்சர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
தக்காளி குறித்து சூப்பர் ஐடியா கொடுத்த உ.பி. அமைச்சர்!

தக்காளி குறித்து உத்தரப் பிரதேச அமைச்சர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கத்தின் விலை போன்றே தக்காளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. 

தக்காளி விலை உயர்வுக்கு பருவம் தவறிய மழை, அதிக வெப்பம் காரணமாக விளைச்சல் குறைவு போன்ற காரணங்களைக் குறிப்பிட்டாலும், விவசாயிகள் மாற்றுப் பயிரை சாகுபடி செய்வதின் காரணமாகவும் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. 

இதையடுத்து, தக்காளி விலை உயர்வுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் கொடுத்துள்ளார் பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா. 

தக்காளியை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

உ.பி. அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இயக்கத்தில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர், சுக்லா கூறியதாவது...

தக்காளி விலை அதிகமாக இருந்தால் மக்கள் வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்கவேண்டும். தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சை பழத்தைப் பயன்படுத்தலாம். 

தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாகக் குறைந்துவிடும். எது விலை அதிகமோ அதை நிராகரிக்கலாம். அது தானாகவே விலை மலிவாகிவிடும். 

அசாஹி கிராமத்தில் சத்துணவு தோட்டம் அமைத்துள்ளோம். இந்த தோட்டத்தில் சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். அதில் தக்காளியையும் நடவு செய்யலாம். தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி உயர்வது புதிதல்ல என்று அவர் கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

முன்னர், நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். இப்போது தக்காளி சாப்பிடுவதை நிறுத்துங்கள் என்று சுக்லா கூறியுள்ளார். இது பெண் அரசியல்வாதிகள் எவ்வாறு உணர்ச்சியற்றவர்களாக உள்ளனர் என்பதை காட்டுவதாக தொழிலதிபர் ரவீந்தர குப்தா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com