11 பெண் துப்புரவுத் தொழிலாளிகள் சேர்ந்த வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு

துப்புரவுத் தொழிலாளர்களின் அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி பரிசு கிடைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் ஹரிதா கர்மா சேனா என்று பெயரிடப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி பரிசு கிடைத்துள்ளது.

ரூ.250 மதிப்பு கொண்ட அந்த லாட்டரி டிக்கெட்டை, 11 பேரில் 9 பேர் தலா 25 ரூபாயும், 2 பேர் தலா 12 ரூபாயும் போட்டு வாங்கியிருக்கிறார்கள்.

இதுபோல ஏற்கனவே நான்கு முறை அனைவரும் சேர்ந்து டிக்கெட் வாங்கினோம். இதுவரை ஒரு பரிசு கூட கிடைக்கவில்லை. இந்த முறையும் அப்படிநினைத்துத்தான் வாங்கினோம். ஆனால், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போதுதான், எனது மகன், லாட்டரியில் பரிசு விழுந்திருக்கும் தகவலைச் சொன்னான்.

அனைவருமே மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்பவர்கள்தான், வீடு வீடாகச் சென்று குப்பைகளைப் பெற்று மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை செய்து அதன் மூலம் குடும்பப் பொருளாதாரத்தை சமாளித்து வருபவர்கள்.

ஒருவரால் 25 ரூபாய் கூட போட முடியாமல், 12 ரூபாய் போட்டு இந்தக் குழுவில் சேர்ந்துள்ளனர். இவர்களது நம்பிக்கை இன்று இவர்களை பணமழையில் நனையவைத்திருக்கிறது.

இவ்வளவு பணத்தை என்ன செய்வீர்கள் என்று இவர்களிடம் கேட்டால், வீடு கட்டுவோம், பிள்ளைகளைப் படிக்க வைப்போம், கடனை அடைப்போம் என்கிறார்கள் ஒருமித்தக் குரலில். இனியும் ஒன்றாகவே இருப்போம். ஒன்றாகவே பணியாற்றுவோம் என்கிறார்கள் மகிழ்ச்சியோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com