திருப்பதி லட்டு தயாரிப்பில் 50 வருடங்களுக்குப் பின் புதிய மாற்றம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாதமான லட்டு, உலகப் பிரசித்தி.
திருமலை ஏழுமலையானின் லட்டு பிரசாதம்.
திருமலை ஏழுமலையானின் லட்டு பிரசாதம்.


பல்லாரி: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாதமான லட்டு, உலகப் பிரசித்தி. இந்த லட்டுத் தயாரிப்புக்காக இதுவரை கர்நாடக பால் கழகத்திடமிருந்து வாங்கப்பட்டு வந்த நெய்யை இனி வாங்குவதில்லை என்று திருப்பதி திருமலை அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

சுமார் 50 ஆண்டுகளாக, திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த நந்தினி நெய், இனி லட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படாததால், லட்டு தயாரிப்பில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மாற்றம் நடக்கவிருக்கிறது.

திருப்பதி லட்டு தயாரிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில், கர்நாடக பால் தயாரிப்புக் கழகம் குறிப்பிட்ட விலையை, திருப்பதி திருமலை கோயில் நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், வேறு நிறுவனத்திடமிருந்து நெய் வாங்கவிருப்பதாகவும் கர்நாடக பால் கழகத்தின் தலைவர் பீமா நாயக் தெரிவித்துள்ளார்.

இந்த நெய்யின் காரணமாகவே, திருப்பதி திருமலை லட்டுவின் ருசி மிக அபாரமாக இருக்கிறது என்று கோயில் நிர்வாகமே பல முறை கூறியிருக்கும் நிலையில், இந்த நிறுவனத்துடன்னான ஒப்பந்தம் தற்போது முடிவுக்கு வருகிறது.

பால் கொள்முதல் விலை அதிகரித்திருப்பதால், நெய்க்கு கூடுதல் விலையை நிர்ணயித்தோம். ஆனால், குறைந்த விலையில் நெய் விற்பனை செய்யும் மற்றொரு நிறுவனத்தை தேர்வு செய்துவிட்டதாக திருப்பதி திருமலை கோயில் அறக்கட்டளை தெரிவித்துவிட்டது. எங்களது தரத்தின் காரணமாகவே, இது சர்வதேச சந்தையில் விற்பனையாகிறது. எங்களது விலையை விட குறைவான விலைக்கு நெய் கொடுக்கிறார்கள் என்றால் நிச்சயம் தரத்தில் சமரசம் இருக்கும். இதுவரை, திருப்பதி திருமலை லட்டு தயாரிப்பு மற்றும் ருசியில் நந்தினி நெய்யின் பங்கு மிக முக்கியத்துவம் பெற்று இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com