மும்பையில் லிவ்-இன் பார்ட்னரை துண்டு துண்டாக வெட்டியவர் காவல் துறையினரால் கைது!

மும்பையின் விரிவாக்கப்பட்ட புறநகரான மீரா சாலையில் 32 வயது பெண் ஒருவர் அவரது 56 வயது லிவ் இன் பார்ட்னரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: லிவ்-இன் பார்ட்னரை  கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வேக வைத்த நபரை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.

மும்பையின் விரிவாக்கப்பட்ட புறநகரான மீரா சாலையில் வசிக்கும் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவரது 56 வயது லிவ்-இன் பார்ட்னரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சாஹ்னி 3-4 நாட்களுக்கு முன்பு சரஸ்வதி வைத்யாவை மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் தனது லிவ்-இன் பார்ட்னரான சரஸ்வதியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்ட மரம் வெட்டும் இயந்திரத்தை வாங்கியுள்ளார். வெட்டிய துண்டுகளை பிரஷர் குக்கரில் கொதிக்க வைத்து மிக்ஸியில் அரைத்து அருகில் உள்ள சாக்கடையில் அப்புறப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திலிருந்து பெண்ணின் துண்டிக்கப்பட்ட சில உடல் பாகங்கள் நாங்கள் மீட்டுள்ளோம். இதன் பின்னணியில் உள்ள காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றனர் காவல் துறையினர்.

அண்மைக்காலமாக, இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவது எங்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து நாங்கள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். வழக்கை விசாரிக்க டிஜிக்கு கடிதம் எழுதுவோம் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார்.

மறுபுறம், தேசியவாத காங்கிரஸ் மக்களவை எம்பி-யான சுப்ரியா சுலே, உள்துறை அமைச்சரான மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் கவனத்தை ஈர்த்து ட்வீட் செய்துள்ளார். மும்பையின் மீரா ரோடு பகுதியில் வசிக்கும் மனோஜ் சாஹ்னி தனது வாழ்க்கைத் துணையை கொலை செய்துள்ளார்.  பிறகு அவரது உடலை குக்கரில் சமைத்து மிக்ஸியில் அரைக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் மூர்க்கத்தனமானது.

சுலே மேலும் கூறுகையில், இந்த மாநிலத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் மீது அச்சம் இல்லாத சூழ்நிலை இதுவாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. மாநில உள்துறை அமைச்சர் இது போன்ற விஷயங்களில்  தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு மரண தண்டனை வழங்க விசாரணை அமைப்புகள் முயற்சிக்க வேண்டும். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மரைன் டிரைவில் உள்ள பெண்கள் விடுதியில் காவலாளியால் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பிறகு கொல்லப்பட்டார். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தவறிவிட்டார் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரான நானா படோலே குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com