ஒடிஸா ரயில் விபத்து எதிரொலி: 24 ரயில்கள் ரத்து

ஒடிஸா ரயில் விபத்தின் எதிரொலியாக தென் கிழக்குப் பகுதியில் இயங்கும் 24 விரைவு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒடிஸா ரயில் விபத்தின் எதிரொலியாக தென் கிழக்குப் பகுதியில் இயங்கும் 24 விரைவு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாஹாநகா பஜார் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் மொத்த இண்டர் லாக்கிங் அமைப்பும் மாற்றப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ஒடிஸாவில் மூன்று ரயில்கள் மோதி 288 போ் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற பாஹாநகா பஜாா் ரயில் நிலையத்தை சிபிஐ அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளதால் அங்கு ரயில்கள் நிற்காமல் செல்கின்றன.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கோரமண்டல் ரயில் உள்பட மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் 288 பேர் பலியாகினர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பஹாநாக பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் லூப் லைனில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. மெயின் லைனில் அதிவேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று லூப் லைனுக்குள் நுழைந்து சரக்கு ரயிலின் மீது மோதியது. சில நொடிகளில் மெயின் லைனில் வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி கோர விபத்து நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com