புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

ஒடிசாவின் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்துள்ளதாக புரி போலீஸார் தெரிவித்தனர்.
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

ஒடிசாவின் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்துள்ளதாக புரி போலீஸார் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலத் தலைநகரின் புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் புரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஜெகந்நாதருக்கு கோலாகலமாக யாத்திரை நிகழ்த்தப்படுகிறது. 

அதன்படி, இந்தாண்டுக்கான ரத யாத்திரை ஜூன் 20-ம் தொடங்கவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரத யாத்திரை நடைபெறும் நாளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து புரி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். இந்த தடை உத்தரவு ஜூலை 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டப்பாட்டை மீறி ட்ரோன்கள் இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com