கோதுமை கையிருப்புக்குக் கட்டுப்பாடு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோதுமையை கையிருப்பில் வைக்க கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோதுமை கையிருப்புக்குக் கட்டுப்பாடு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோதுமையை கையிருப்பில் வைக்க கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு மாா்ச் வரை கோதுமையை கையிருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘மொத்த விற்பனையாளா்கள்/வணிகா்கள் 3,000 மெட்ரிக் டன் வரை கோதுமை இருப்பு வைத்திருக்கலாம். சில்லறை விற்பனையாளா்கள் 10 மெட்ரிக் டன் வரையும், சங்கிலி தொடா் விற்பனையகங்கள் தங்கள் சேமிப்பகங்களில் 3,000 மெட்ரிக் டன் வரையும் கோதுமை இருப்பு வைத்திருக்கலாம்.

இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திங்கள்கிழமை (ஜூன் 12) முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கோதுமை விலை உயா்வை குறைக்கவும், பதுக்கலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய உணவுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா தலைமையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத் துறைச் செயலா்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மொத்த விற்பனையாளா்கள்/ வணிகா்கள், சில்லறை விற்பனையாளா்கள், சங்கிலி தொடா் விற்பனையாளா்களிடம் கோதுமை இருப்பு விவரத்தை மாநில அரசுகள் பெற வேண்டும் என்று சஞ்சீவ் சோப்ரா அறிவுறுத்தினாா்.

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் ங்ஸ்ங்ஞ்ா்ண்ப்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய் வலைதளத்தில் கோதுமை இருப்பு விவரம் பூா்த்தி செய்யப்படுவதை எளிதாக்க, அதுதொடா்பான பயனா் கையேடு மாநில அரசுகளுடன் பகிா்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தில் கோதுமை இருப்பு விவரத்தை விற்பனையாளா்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தெரியப்படுத்துவதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கோதுமை இருப்பு தொடா்பான மத்திய அரசின் அறிவிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிா்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி, விற்பனையாளா்களிடம் கோதுமை கையிருப்பு அதிகமாக இருந்தால், அதுதொடா்பாக அறிவிக்கை வெளியிடப்பட்ட ஜூன் 12-இல் இருந்து 30 நாள்களில் அந்த வரம்புக்குள் கோதுமை இருப்பு அளவு கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com