பிபர்ஜாய் புயல்: ராஜஸ்தானின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

ராஜஸ்தானில் பிபர்ஜாய் புயல் காரணமாக 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
பிபர்ஜாய் புயல்: ராஜஸ்தானின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

ராஜஸ்தானில் பிபர்ஜாய் புயல் காரணமாக 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜெய்ப்பூரின் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ராதேஷ்யம் சர்மா கூறுகையில், 

பிபர்ஜாய் புயலின் தாக்கம் ராஜஸ்தனின் 12 மாவட்டங்களில் காணப்படும். இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. 

அதிதீவிர புயலாக மாறியுள்ளதைக் கருத்தில் கொண்டு, ராஜஸ்தானில் இருந்து போர்பந்தர், பூஜ், ஓகா மற்றும் குஜராத்தில் உள்ள காந்திதாம் வரை 12-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 15) மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய அரபிக் கடலில் கடந்த 6-ஆம் தேதி உருவான இந்தப் புயல், குஜராத்தின் மாண்டவி நகருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் வரும் 15-ஆம் தேதி நண்பகலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆனால், ராஜஸ்தானில் பிபர்ஜாய் புயல் சேதம் விளைவிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் அதிக ஈரப்பதம் காரணமாக கனமழை (60 முதல் 100 மிமீ வரை) பெய்யும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜூன் 15 அன்று நண்பகலுக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை தொடங்கும் என்று கூறினார். ஜூன் 16 அன்று, ஜோத்பூர் மற்றும் உதய்பூர் பிரிவு மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யும். 

தென்மேற்கு ராஜஸ்தானில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும். ஜூன் 17 அன்று ஜோத்பூர், உதய்பூர் மற்றும் அஜ்மர் பிரிவுகளின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.

பிபர்ஜாயின் தாக்கம் பான்ஸ்வாரா, துங்கர்பூர், உதய்பூர், சிரோஹி, ஜலூர், பார்மர், ஜெய்சால்மர், பாலி, ஜோத்பூர், பிரதப்கர், ராஜ்சமந்த், சிட்டோர்கர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com