செந்தில் பாலாஜி கைது: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்!

மத்திய அரசு அமலாக்கத்துறையை தவறாகப் பயன்படுத்துவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் தெரிவித்துள்ளார். 
செந்தில் பாலாஜி கைது: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்!
Published on
Updated on
1 min read

மத்திய அரசு அமலாக்கத்துறையை தவறாகப் பயன்படுத்துவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டனா். 

சுமார் 17 மணி நேர சோதனைக்குப் பிறகு இன்று அதிகாலை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் செல்லும் வழியில், நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் செந்தில் பாலாஜி கூறிய நிலையில் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய், 'மத்திய அரசு, அமலாக்கத்துறை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவது முற்றிலும் தவறு' என்று கூறியுள்ளார். 

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com