

டேஹ்ராடூன்: டேஹ்ராடூனில் இருந்த ஒரு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளேச் செய்த காவலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
வீட்டுக்குள் 25 வயது மதிக்கத்தக்க ஆணும், 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் இறந்தநிலையில் கிடக்க அவர்களுக்கு இடையே பிறந்து 6 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரோடு இருந்தது.
முதற்கட்ட விசாரணையில், அந்த தம்பதி 3 நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த குழந்தை பிறந்த 6 நாள்களே ஆன நிலையில், உணவோ, தண்ணீரோ எதுவுமின்றி, அதுவும் இரண்டு உடல்களுக்கு இடையே மூன்று நாள்களாக அந்தக் குழந்தை உயிரோடு இருப்பது காவல்துறையினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்துள்ளது. கடன் தொல்லையால் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.