

ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஐஐடி இயக்குநர்களுடன் சந்திப்பு நிகழ்த்தினார்.
முதல்வர் சுகு ஐஐடி மாண்டி இயக்குனர் லக்ஷ்மிதர் பேஹரா மற்றும் ஐஐடி ரோபார் இயக்குனர் ராஜீவ் அஹுஜா ஆகியோரை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை சுகு வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் தொழிற்துறையை நிறுவுவது குறித்தும் ஐஐடிக்களிடமிருந்து பரிந்துரைகளை நாடினார்.
பாலாம்பூரை ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலமாக தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.
இந்த முயற்சி மாநில இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.