ஜூன் 20ல் அமெரிக்கா, எகிப்துக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 முதல் 25ம் தேதி வரை 5 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளி விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 
ஜூன் 20ல் அமெரிக்கா, எகிப்துக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 முதல் 25ம் தேதி வரை 5 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளி விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

அமெரிக்காவிற்கு மோடியின் வருகை நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. ஜூன் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். 

பின்னர், வாஷிங்டன் செல்லும் அவர் ஜூன் 22 அன்று வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உரையாட உள்ளார். அதன்பின்னர், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

ஜூன் 23-ல் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பில்ன்கள் ஆகியோருடன் மதிய உணவில் கலந்துகொள்கிறார். 

ஜூன் 24, 25ல் எகிப்துக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. அங்கு அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்திக்கிறார். பிரதமராக எகிப்துக்கு மோடியின் முதல் வருகை இதுவாகும். பின்னர் எகிப்திய அரசைச் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் அவர் சந்தித்துப் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com