ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு 25 லட்சம் பேர் வருவார்கள்: தலைமை நிர்வாகி

ஒடிசாவின் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலின் வருடாந்திர ரத யாத்திரைக்கு இந்தாண்டு 25 லட்சம் பேர் வருவார்கள் என தலைமை நிர்வாகி ரஞ்ஜன் குமார் தாஸ் தெரிவித்துள்ளார். 
ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு 25 லட்சம் பேர் வருவார்கள்: தலைமை நிர்வாகி
Updated on
1 min read

ஒடிசாவின் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலின் வருடாந்திர ரத யாத்திரைக்கு இந்தாண்டு 25 லட்சம் பேர் வருவார்கள் என தலைமை நிர்வாகி ரஞ்ஜன் குமார் தாஸ் தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலத் தலைநகரின் புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் புரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஜெகந்நாதருக்கு கோலாகலமாக யாத்திரை நிகழ்த்தப்படுகிறது. 

அதன்படி, இந்தாண்டுக்கான ரத யாத்திரை ஜூன் 20-ம் தொடங்கவுள்ளது. பல்வேறு ஆச்சரியங்கள் அடங்கிய இக்கோயிலில் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதப் பௌர்ணமியில் தொடங்கி ஒன்பது நாள்கள் ரதயாத்திரை நடைபெறும். இந்த தேர்த் திருவிழாவை குண்டிச யாத்ரா, கோச யாத்ரா, நவ தீனயாத்ரா எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். 

இந்தாண்டு ரத யாத்திரையை எந்தவித குறைபாடும் இன்றி சீராக நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சீரான குடிநீர், வெயிலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ரத யாத்திரைக்கு சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தாஸ் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com