பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கட்ச் மாவட்டம் விரைவில் மீண்டெழும்: பிரதமர் மோடி நம்பிக்கை

பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் கட்ச் மாவட்டம் விரைவில் மீண்டெழும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் கட்ச் மாவட்டம் விரைவில் மீண்டெழும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வானொலி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது, பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும். இயற்கை பேரிடர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதிலிருந்து விரைவாக மீள முடியும். 

20 ஆண்டுகளுக்கு முன்பாக, பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு, இதிலிருந்து மீளவே முடியாது என்று எந்தக் கட்ச் பகுதி குறித்துக் கூறப்பட்டதோ, இன்று அதே மாவட்டம், தேசத்தின் விரைவாக முன்னேற்றம் அடைந்துவரும் மாவட்டங்களில் ஒன்று. இந்தச் சூறாவளியான பிபர்ஜாய் ஏற்படுத்தியிருக்கும் கோரத்தாண்டவத்திலிருந்து கட்ச் பகுதி மக்கள் விரைவிலேயே மீண்டெழுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. 

பேரிடர் மேலாண்மை பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சத்ரபதி சிவாஜி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கோட்டைகள் இன்று வரை கம்பீரமாக நிற்கின்றன. 2025க்கும் காசநோயை ஒழிக்க தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. விளையாட்டுத் துறையில் இந்தியா மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயகத்திற்கு எதிரான அவசர நிலை ஜூன் 25ல் தான் அமல்படுத்தப்பட்டது.

வீட்டுப்பாடங்களை மாணவர்கள் முன்னதாகவே முடிக்க வேண்டும். அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்வதால் இம்முறை மன் கி பாத் ஒருவாரம் முன்னதாகவே நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com