
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 4 ஆயிரம் வீடுகள் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தக் கலவரம் எப்படி நடந்தது. எப்படி இதை எதிர்காலத்தில் தடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம். இதுபோன்ற கலவரங்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
சில நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் தற்காலிகமாக தங்கும் வகையிலான வீடுகளை கட்டும் பணிகளில் மாநில அரசு ஈடுபடவுள்ளது. சுமார் 3000 முதல் 4000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. எந்தப் பகுதியில் கட்டுமானம் மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி மற்றும் குகி-நாகா இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 120 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.