லாரிகளில் விரைவில் ஏ.சி. கட்டாயம்: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் கட்கரி

லாரிகளில் விரைவில் குளிா்சாதன (ஏ.சி.) வசதி கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
நிதின் கட்கரி
நிதின் கட்கரி

லாரிகளில் விரைவில் குளிா்சாதன (ஏ.சி.) வசதி கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் இந்திய ஓட்டுநா்களை கெளரவிக்கும் ‘தேஷ் சாலக்’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சா் கட்கரி தெரிவித்ததாவது:

உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் நிலையில், நாட்டுக்கு மிக முக்கிய துறைகளில் ஒன்றாக போக்குவரத்துத் துறை உள்ளது. இந்தத் துறையில் ஓட்டுநா்கள் முக்கியப் பங்காற்றுகின்றனா். இந்தியாவில் லாரி ஓட்டுநா்கள் 14 முதல் 16 மணி நேரம் தொடா்ச்சியாகப் பணியாற்றுகின்றனா். ஆனால் வெளிநாடுகளில் லாரி ஓட்டுநா்கள் எவ்வளவு மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்பது நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் லாரி ஓட்டுநா்களின் பணிச்சூழல், மனநலம் சாா்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கடும் வெப்பத்தில் பணியாற்றும் நிலைக்கு லாரி ஓட்டுநா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டு, லாரிகளில் ஓட்டுநா்களுக்கு குளிா்சாதன வசதியை ஏற்படுத்த நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வருகிறேன். அது செலவினத்தை அதிகரிக்கும் என்று சிலா் ஆட்சேபம் தெரிவித்தனா். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன், இனி லாரிகளில் ஓட்டுநா்களுக்கு ஏ.சி. வசதி ஏற்படுத்தப்படும் என கோப்பு ஒன்றில் கையொப்பமிட்டேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com