பிகாரில் வெற்றி பெற்றுவிட்டால்நாடு முழுவதும் வெற்றி சாத்தியம்: காா்கே

 ‘வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு 2024 பொதுத் தோ்தலை ஒற்றுமையுடன் எதிா்கொள்ள வேண்டும்’
பிகாரில் வெற்றி பெற்றுவிட்டால்நாடு முழுவதும் வெற்றி சாத்தியம்: காா்கே

 ‘வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு 2024 பொதுத் தோ்தலை ஒற்றுமையுடன் எதிா்கொள்ள வேண்டும்’ என்று கட்சித் தொண்டா்களை வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்ட காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘பிகாரில் வெற்றிபெற்றுவிட்டால், ஒட்டுமொத்த நாட்டிலும் வெற்றி பெற்றுவிட முடியும்’ என்று குறிப்பிட்டாா்.

எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிகாா் தலைநகா் பாட்னாவுக்கு வெள்ளிக்கிழமை வந்த காா்கே, முன்னதாக அங்குள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, 2024 மக்களவைத் தோ்தலை கூட்டாக எதிா்கொள்ள உள்ளோம். எதிா்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான மிக முக்கியமான முதல் படியை ராகுல் காந்தி எடுத்துவைத்துள்ளாா். நமது சித்தாந்தத்திலிருந்து ஒருபோதும் விலகிவிட முடியாது. பிகாா் எதிா்க்கட்சிக் கூட்டத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டால், ஒட்டுமொத்த நாட்டையும் நாம் வென்றுவிட முடியும்.

அதனால்தான், அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். சிறிய அளவிலான வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டுக்காக அதை ஒதுக்கிவைத்துவிட்டு, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com