ரூ.1,649 கோடி வீட்டில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர்!

இந்தியத் தொழிலதிபரான பங்கஜ் ஓஸ்வால், சுவிட்சர்லாந்தில் ரூ.1,649 கோடி மதிப்புடைய பிரமாண்ட வீட்டை வாங்கியுள்ளார். உலகின் அதிக விலையுடைய 10 வீடுகளின் பட்டியலில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
ரூ.1,649 கோடி வீட்டில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர்!

இந்தியத் தொழிலதிபரான பங்கஜ் ஓஸ்வால், சுவிட்சர்லாந்தில் ரூ.1,649 கோடி மதிப்புடைய பிரமாண்ட வீட்டை வாங்கியுள்ளார். உலகின் அதிக விலையுடைய 10 வீடுகளின் பட்டியலில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரான பங்கஜ் ஓஸ்வால் தனது மனைவி ராதிகாவுடன் இணைஅந்து, சுவிட்சர்லாந்தில் விலையுயர்ந்த வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 200 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் சுமார் ரூ.1,649 கோடி. 
இந்த வீட்டுக்கு வில்லா வாரி எனப் பெயரிட்டுள்ளார். 

ரிதி ஓஸ்வால்
ரிதி ஓஸ்வால்

இந்த வீடு மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள வாவுட் மாகாணத்திற்குட்பட்ட ஜின்ஜின்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. வில்லா வாரி என்றழைக்கப்படும் இந்த வீடு உலகின் விலையுயர்ந்த 10 வீடுகளில் ஒன்றாக உள்ளது. 

மகள் வசுந்தரா ஓஸ்வாலுடன் பங்கஜ் ஓஸ்வால்
மகள் வசுந்தரா ஓஸ்வாலுடன் பங்கஜ் ஓஸ்வால்

ஜெஃப்ரே வில்கெஸ் என்ற கட்டடக் கலைஞர் வில்லா வாரியை பங்கஜ் ஓஸ்வாலின் விருப்பத்திற்கேற்ப சீரமைத்துள்ளார். இவர், ஜெய்ப்பூரிலுள்ள ஓபிராய் ராஜ்விலாஸ், உதய்ப்பூரிலுள்ள ஓபிராய் உதய்விலாஸ், லீலா பேலஸ் போன்ற புகழ்பெற்ற கட்டடங்களை வடிவமைத்தவர். 

தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், 2016ஆம் ஆண்டு மறைந்த அபே குமார் ஓஸ்வாலின் மகனாவார். இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா என்பவரை மணந்தார். வசுந்தரா (24), ரிதி (19) என்ற இரு மகள்களும் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com