
புதுதில்லி: கோ ஃபர்ஸ்ட் நிறுவனம், ஜூலை 6ஆம் தேதி வரை, விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
வாடியா குழுமத்தின் 'கோ ஃபா்ஸ்ட்' விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதன் விமான சேவைகள் மே 3ஆம் தேதி முதல் ரத்துசெய்யப்பட்டள்ளன. அதன் பிறகு விமானங்களை ரத்து செய்வதை பல முறை நீட்டித்துள்ளது.
இதற்கிடையே, கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகத்தின் மூத்த பிரதிநிதிகள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அதிகாரிகளுடன் மீட்டெடுத்தல் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
சில செயல்பாட்டு காரணங்களால், ஜூலை 6 வரை கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று பட்ஜெட் கேரியர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
உடனடியாக தீர்வு காணவும், செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் விரைவில் முன்பதிவுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று விமான நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.