கலால் கொள்கையின் முழு ஊழலுக்கும் சூத்திரதாரி கேஜரிவால்தான்!

ஆம் ஆத்மி அரசின் கலால் வரிக் கொள்கைக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக்கோரி பாஜகவினர் தில்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
கலால் கொள்கையின் முழு ஊழலுக்கும் சூத்திரதாரி கேஜரிவால்தான்!

ஆம் ஆத்மி அரசின் கலால் வரிக் கொள்கைக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக்கோரி பாஜகவினர் தில்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

பாஜகவினர் தில்லியின் ஐடிஓ ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். 

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தில்லி அமைச்சரவையில் இருந்து மணீஷ சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ராஜிநாமா செய்தது உண்மைக்கும் கட்சி ஊழியர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், அதேநேரத்தில் முதல்வர் கேஜரிவாலும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதுதொடர்பாக பாஜகவின் செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், 

கேஜரிவாலின் கூற்றுப்படி அவரது அமைச்சர்கள் நியாயமானவர்கள் என்றால் உச்சநீதிமன்றம் அவர்களின் ராஜிநாமாவை ஏற்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி கூறுகையில், 

ஆத் ஆத்மி கட்சியை கடுமையாக சாடியதோடு, கலால் கொள்கையின் முழு ஊழலுக்கும் கேஜரிவால் தான் சூத்திரதாரி என்றும் குற்றம் சாட்டினார். 

2021-22ஆம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்தப்பட்டதாகக் கூறி துணை முதல்வர் சிசோடியா சிபிஐயால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com