
அடுத்த நிதியாண்டு முதல் 2 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யின் வரியற்ற இறக்குமதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு ஆதரவளிக்க முயற்சி எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
மே 2022ல் மத்திய அரசு 2022-23ஆம் ஆண்டில் 2 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது. அதே வேளையில் 2023-24 ஆம் ஆண்டில் அதை மீண்டும் செய்ய முதலில் திட்டமிட்டது.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெயை இந்தியா பெற்று வந்தது. கூடுதலாக ஆர்ஜென்டினா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் சோயா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. மேலும் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்தது.
இந்த நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்ய கடந்த ஜனவரி மாதம் இந்தியா முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.