மேகாலயத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்த என்பிபி கட்சி!

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெற்கு துரா தொகுதியில் பாஜக வேட்பாளர் பெர்நார்டு மரக் மற்றும் மேகாலயத்தின் முதல்வர் சங்மா போட்டியிட்டனர். 

இந்நிலையில், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா 10,090 வாக்குகள் பெற்று, தனது போட்டியாளரான பாஜகவின் பெர்னார்ட் மாரக்கை 2,830 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். மாரக் 7,260 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

தேசிய மக்கள் கட்சிக்கு(என்பிபி) வாக்களித்த மக்களுக்கு சங்மா நன்றி தெரிவித்தார்.

60 சட்டமன்றத் தொகுதிகளில் என்பிபி கட்சி 26 இடங்களில் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயத்தில் ஆட்சியைத் தக்கவைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com