திப்ரா மோதாவின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.. ஒன்றைத்தவிர: பாஜக

திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக வெற்றிமுகம் காட்டிவருகிறது.
திப்ரா மோதாவின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.. ஒன்றைத்தவிர: பாஜக
திப்ரா மோதாவின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.. ஒன்றைத்தவிர: பாஜக

திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக வெற்றிமுகம் காட்டிவருகிறது.

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, 832 வாக்குகள் வித்தியாசத்தில் போர்தோவாலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஸ் குமார் சாஹாவை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

இந்த நிலையில், புதிய கட்சியாக உருவெடுத்திருக்கும் திப்ரா மோதாவின் திப்ராலாந்து என்ற தனி மாநிலக் கோரிக்கையையைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக பாஜக  அறிவித்துள்ளது.

இன்று மதிய நிலவரப்படி, திரிபுராவில் 32 தொகுதிகளில் பாஜக முன்னணியில் உள்ளது. இது பெரும்பான்மை தொகுதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஒரு தொகுதி அதிகமாகும். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா மக்கள் முன்னணி கட்சியும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

திரிபுராவின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் விக்ரம் மாணிக்யா தலைமையிலான திப்ரா மோதா முதல் முறையாக இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணி ஒட்டுமொத்தமாக 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் பாஜக யாருடைய ஆதரவும் இன்றி ஆட்சிப் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மாநிலத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போகிறோம். இதைத்தான் நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com