திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜிநாமா 

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் இன்று சமர்ப்பித்தார்.
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜிநாமா 

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் இன்று சமர்ப்பித்தார்.

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இங்கு பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், பாஜக 55 இடங்களிலும் ஐபிஎஃப்டி மீதமுள்ள தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாஜகவை எதிா்கொள்வதற்காக, இம்மாநிலத்தில் முதல்முறையாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தன. புதுவரவாக, மாநிலக் கட்சியான திப்ரா மோத்தாவும் களம் கண்டிருந்தது.

தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், 38.97 சதவீத வாக்குகளுடன் பாஜக 32 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. பாஜக கடந்த முறை 35 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை 3 தொகுதிகள் குறைந்துள்ளன. இருப்பினும், இங்கு பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

புதுவரவான திப்ரா மோத்தா கட்சி, 13 இடங்களைக் கைப்பற்றி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய பழங்குடியினரின் வாக்குகளை, திப்ரா மோத்தா அள்ளியதால், அக்கூட்டணி பின்னடைவை சந்தித்தது. திரிபுராவில் 28 இடங்களில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. நோட்டாவைவிட குறைவான வாக்குகளே அக்கட்சிக்கு கிடைத்துள்ளன.

இந்த நிலையில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இன்று தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவிடம் சமர்ப்பித்தார். அப்போது புதிய அரசு அமையும் வரை சாஹாவை காபந்து முதல்வராக தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.  இதுகுறித்து மாணிக் சாஹா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்று நான் எனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன்.

புதிய அரசு அமையும் வரை என்னை முதல்வராக தொடருமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். பதவியேற்பு விழா மார்ச் 8ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com