மேகாலயத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் கான்ராட் சங்மா!

மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைகோரினார். 
மேகாலயத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் கான்ராட் சங்மா!

மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைகோரினார். 

முதல்வர் பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பாகு செளஹானிடம் கான்ராட் சங்மா வழங்கினார்.

மேகாலயத்தில் 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று (மார்ச் 2) காலைமுதல் எண்ணப்பட்டன. இதில், தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.    

ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
மேகாலயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு தொங்கு பேரவை உருவாகியுள்ளது. 

பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளும் தேசிய மக்கள் கட்சி முயற்சித்துள்ளது. 

மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி)-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தோ்தலுக்கு முன்பாக கூட்டணியை முறித்த பாஜக, அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கியது. ஆனால் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com