வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பிகார் அரசின் 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வரவுள்ளது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விடியோக்கள் மூலமாக வதந்தி பரவி வருகிறது.
ஆனால், இந்த விடியோக்கள் போலியானவை என்றும் இதுபோன்று வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர், அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் கூறியிருந்தார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பிகார் அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வரவுள்ளது.
இதுகுறித்து இன்று மாலை சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இரு மாநில குழுக்கள் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.