
ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் தில்லி அமைச்சரவையில் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், திகார் சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் ராஜிநாமாவைக் குடியரசுத் தலைவர் முர்மு செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தில்லியில் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட அதிஷி மர்லினா மற்றும் சௌரப் பரத்வாஜ் இன்று மாலை 4.00 மணியளவில் பதவியேற்க உள்ளனர். இதுதொடர்பாக பொது நிர்வாகத் துறை பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.